search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் தொடர்"

    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார். #AaronFinch #AUSvIND
    மெலபோர்ன்:

    இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு. வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே தோல்விக்கு காரணம். எனது ஆடும் உத்தியில் தவறுகளை களைய வேண்டும். எனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் டெஸ்ட் தொடரில் 96 ரன்களும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களும் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவர் 3 முறையும், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்தார். #AaronFinch #AUSvIND
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் புதிய சாதனையை படைத்துள்ளனர். #INDvWI #ViratKohli #rohitsharma
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்றைய ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் எடுத்தனர். சேசிங்கில் இந்திய ஜோடி எடுத்த அதிக ரன் இதுவாகும். இதன் முலம் இருவரும் புதிய சாதனை படைத்தனர்.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கோலி- காம்பீர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு சேசிங்கில் 224 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. காம்பீருடன் படைத்த சாதனையை கோலி தற்போது ரோகித்துடன் இணைந்து முறியடித்துள்ளார்.

    ஒட்டு மொத்த அணிகளில் சேசிங்கில் 5-வது சிறந்த ரன் இதுவாகும். ஜெயசூர்யாவும், உபுல் தரங்கவும் 2006-ம் ஆண்டு 2-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து எதிராக (2006) 286 ரன் எடுத்ததே சேசிங்கில் எடுக்கப்பட்ட அதிக ரன் ஆகும். #INDvWI #ViratKohli #rohitsharma
    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் சர்மாவுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli #rohitsharma
    கவுகாத்தி:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. ஹெட்மயர் (106 ரன்) சதம் அடித்தார். சாஹல் 3 விக்கெட்டும், ஜடேஜா, முகமது சமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் விராட்கோலி- ரோகித் சர்மா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் குவித்து வெற்றியை எளிதாக்கியது.

    இந்தியா 42.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 152 ரன்னும், விராட்கோலி 140 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி பேசும்போது, ரோகித்சர்மாவை பாராட்டினார். அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வெற்றியாகும். வெஸ்ட்இண்டீஸ் சவாலான இலக்கை நிர்ணயித்தது.

    323 ரன் இலக்கை ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியமாகும். இதற்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் தேவை என்பதை அறிவோம்.

    ரோகித் சர்மா மறுமுனையில் இருக்கும்போது பெரிய ரன் இலக்கை எடுப்பது என்பது எளிதானது. டாப் 3 வீரர்களில் நான் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட விரும்புவேன்.

    ஏனென்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். ஆனால் இந்த போட்டியில் நான் அடித்து ஆட முடிவு செய்து ரோகித்சர்மாவை உறுதுணையாக நின்று விளையாடு என்று கூறினேன்.

    நான் அவுட் ஆன பிறகு ரோகித்சர்மா அதிரடியாக விளையாடினார். ரோகித் சர்மாவுடன் இது 5 அல்லது 6-வது இரட்டை சதம் பார்டனர்ஷிப் ஆகும்.

    ரோகித்துடன் இணைந்து விளையாடுவதை எப்போதும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். இதனால் அணிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்.

    பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது. இந்த பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட்இண்டீஸ் அடித்து ஆடும்போது கட்டுப்படுத்துவது கடினம். அதனால் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட இன்னும் சில ஆண்டுகள் என் கணக்கில் உள்ளன. நாட்டுக்காக விளையாடுவது என்பது அரிதானது. அப்படியுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #INDvWI #WIvIND #RohitSharma #Viratkholi
    வெஸ்ட்இண்டீஸ்- வங்காளதேசம் இடையேயான தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. #WIvBAN
    வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வங்காளதேச கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், 2-வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றன. ஒருநாள் போட்டி தொடரை வெல்வது யார்? என்பது நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். #WIvBAN
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. #Australia #England
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

    டிராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர். ஆரோன் பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார்.



    அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.
    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் இறங்கினர். 

    இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 174 ஆக இருக்கும்போது ஜேசன் ராய் 83 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவ் 66 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 79 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானமாக ஆடினார். இறுதியில் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஹேல்ஸ் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அத்துடன் தொடரை 4-0 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாசார்பில் ஆஷ்டன் அகர் 2 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #AUSvsENG
    இங்கிலாந்தின் செஸ்டர் லீ ஸ்டீரிட் நகரில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #Australia #England
    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே விளையாடிய 3 போட்டிகளிலும் இங்கிலாந்து  வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்நிலையில், செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் மற்றும், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

    முதலில் இருந்தே இந்த நிதானமாக விளையாடியது. இதனால் அணியின் எண்ணிக்கை 101 ரன்களாக இருக்கும்போது ஹெட் 63 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் பிஞ்சுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட சமாளித்து சதமடித்து அசத்தினர்.

    அணியின் எண்ணிக்கை 225 ஆக இருக்கும்போது பிஞ்ச் 100 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய ஷான் மார்ஷ் 101 ரன்களில் அவுட்டாகினார்.



    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளும், மார்க் வுட், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது. #AUSvsENG
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. #England #Australia
    நாட்டிங்காம்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும்
    அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 159 ஆக இருக்கும் போது முதல் விக்கெட்டாக ஜேசன் ராய் 61 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய அலெக்ஸ் ஹேல்சும் அதிரடியை தொடர்ந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஒரு ஓவருக்கு 8 ரன்களாக உயர்ந்தது.

    அணியின் எண்ணிக்கை 310 ஆக இருந்தபோது சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்ததுடன் 92 பந்துகளில் 5 சிக்சர், 15 பவுண்டரியுடன் 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து ஹேல்சும் சதமடித்தார். அடுத்து இறங்கிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மார்கன் 30 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    பொறுப்புடன் ஆடிய ஹேல்ஸ் 92 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரியுடன் 147 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட்டுக்கு 459 ரனகள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஏற்கனவே தான் அடித்திருந்த 444 ரன்களை கடந்து இங்கிலாந்து அணி உலக சாதனை புரிந்துள்ளது.
       
    இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 482 ரன்கள் என்ற கடின் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், 
    மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களில் ஆல் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், மொயின் அலி 3 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி 242 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். #ENGvsAUS
    ×